Subscribe Now: Feed Icon

Monday

மன்மதலீலைகள் : சிம்ரன்


ஸ்லிம் நடிகையின் மீடியாபிரவேசம் என்பது 'மாடலிங்' மூலமாகத்தான்! 'மாதிரி'த்துறையின் மூலம் என்ட்ரீயாகி எல்லோரையும் ஒரு மாதிரியாக்கப் போகிறார் என்று அப்போது யாருக்குத் தெரியும்?

மாடலிங் உலகிலிருந்து பாலிவுட்டில் அவரது பிரவேசம் என்பது ஹிந்தி படவுலகின் சூப்பர்ஸ்டார் எனப்படும் அந்த உயர்ந்த நடிகரின் சொந்தப்படம் மூலம்தான் ஏற்பட்டது!

அந்தப்படத்தில் தன்னை டம்மியாக்கிவிட்டு சக நடிகைக்கு முன்னுரிமை தந்ததாக பரபரப்பாக குற்றம் சாட்டிவிட்டு தென்னகம் நோக்கி திரும்பினார் ஸ்லிம்!

பூவைச் சூடிக் கொள்ள அழைத்தது முதல் படம். அந்தப்படத்தின் உதயமானவர் இப்போது தெலுங்கில் பெரிய டைரக்டர். ஆனால் அப்போது அவருக்கு அது முதல் படம். தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்லிம் மீது அந்த டைரக்டர் காதல் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் ஸ்லிம்மின் பார்வையோ அந்த படத்தின் ஹீரோ மீது!

ஏன்?

நிஜத்தின் இடது கைப்பழக்கமுள்ள அந்த ஹீரோவும் ஸ்லிம் நடிகையும் ஏற்கனவே மாடலிங் உலகில் இருந்தபோது நண்பர்களானவர்கள்!

பழக்கமில்லா ஊரில், பாஷை அறியாத ஊரில் கிடைத்த ஒரே நண்பனை விடத்தயாரில்லை ஸ்லிம் நடிகை!

நடிகர் தங்கியிருந்த பிளாட்டுக்கு ஸ்லிம் போவதும், ஸ்லிம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடிகர் போவதுமாக நட்பு அழுத்தமாகி... அந்த அழுத்தம் காதலாக வெடித்துக் கிளம்பியது!

பார்ட்டிகளிலும், டிஸ்கொதேக்களிலும் ஜோடியாய் கூடித்திரிந்தார்கள்!

இந்த விஷயம் டைரக்டருக்கு தெரிந்தாலும் மும்பையில் இருந்த பெண் இப்படித்தான் பாய்ஃபிரண்ட் வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஸ்லிம்மை நான்தான் காதலிக்கிறேன்! என ஒருதலை ராகம் பாடிக் கொண்டிருந்தார்!

நடிகரான தன் காதலனின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்த ஸ்லிம் நடிகை ஒரு நாள் அங்கே தங்கினார்!

அப்புறமென்ன...?

'உயிருக்குயிராய்' காதலித்துக் கொண்டிருந்தவர்கள் 'உடலக்குடலாய்' காதலிக்கத் தொடங்கிவிட்டனர்.

எதுவும் தெரியாதவரை 'என்னவோ..ஏதோ!' சுகம்!
அறிந்த பிறகு சும்மா இருக்குமா மனசு!
மனசு மறுத்தாலும்...தேகத்துக்கு தாகமெடுக்கும்!

எடுத்தது!

தினமும் ஒருவரை ஒருவர் குடித்தார்கள்!

எதற்கும் எல்லை உண்டு!

எல்லை மீறப்போகும் எதுவும் சரிபட்டு வராது!

கோழி மிதித்து குஞ்சே செத்தது போல்....!
காமம் மிதித்து இந்த காதலே செத்துப் போனது ஒருநாள்!

இடது கை நடிகர்-ஸ்லிம் நடிகையின் காதல்.... கோழி மிதித்து குஞ்சு சாகிறது போல் காமம் மிதித்து காணாமல் போனது! அது ஒரு இன்ப மயமான சோகம்தான். பெண்ணின் காமம் என்பது இரவில் தீப சுடராய் பிரகாசிக்க வேண்டும். அந்த ஜோதியை ஆண் தரிசனம் செய்ய வேண்டும்.

ஆனால் ஸ்லிம் விஷயத்தில் அப்படியில்லை.

.... அன்று அதிகாலை மூன்று மணி இருக்கும். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் லெப்ஃட் ஹேண்ட் நடிகர். அந்த நேரத்தில் காலிங் பெல் கதறித் துடிக்க... எரிச்சலோடு கதவை திறந்தார் நடிகர். இரவு நேர ஆடையோடு எதிரில் ஸ்லிம்!

சொக்கி சொருகிய கண்கள், நளினமான நாசியில் வெப்ப மூச்சு, கச்சையால் போட்டிருந்த கட்டுகளை உடைத்துக் கொண்டு வெளியே பாயத்துடித்துக் கொண்டிருந்த முசக்குட்டி நெஞ்சின் விம்மல்கள்., வழுக்கி ஓடும் இடை, பம்பரம் விடச்சொல்லியோ, ஆம்லெட் போடச்சொல்லியோ அவசரப்படுத்திய தொப்புள். இப்படி மோகினிப் பேயாய் அழகான ராட்சசியாய் நின்று கொண்டிருந்தார் ஸ்லிம்!

ஆனால் அந்த ரதியை ரசிக்கிற மூடில் இந்த மன்மதன் இல்லையே...!

'என்ன இந்நேரத்தில்?'

'எனக்கு வேணும்!'

உதட்டைச் சுழித்து கிறக்கமாய் சிரித்தபடி..வழிமறித்த காதலனை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த ஸ்லிம்...தானே கதவைதாழ்ப்பாள் போட்டார்!

ஆசை...வெட்கமறியாது என்பார்கள்! அதனால்தான் அர்த்தராத்திரியிலும் மோகம் முத்திப் போய் காதலனைத் தேடி வந்தார்!

ஆசை.,, வெட்கமறியாது!

ஸ்லிம் வந்தார்.!

ஆனால்...தூக்ககலக்கத்தில இருந்த காதலனுக்கு ஆசை வரவில்லை...ஆத்திரம் தான் வந்தது!

தூங்குவதற்குமுன் எதுவேண்டுமானாலும் சுகமாக இருக்கலாம்! ஆனால் தூங்கிவிட்ட பிறகு தூக்கத்திற்கு சுகமான சுகம் இந்த பூமியில் தேடினாலும் கிடைக்காது!

'.....என்ன நீ மூட்... அவுட் பண்றே?'

'எனக்கு மூட் வந்திருச்சே?!'

'புது' பட ஸ்டைலில் காதலனை உப்புமூட்டை தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் கிடத்தினார் ஸ்லிம்!

வந்ததே கோபம் காதலனுக்கு. 'பளார்' என ஒரு அறைவிட்டார்!

கொஞ்ச நேரம்...இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை!

ஒரு பெண்ணுக்கு கோபமும் வெறியும் எப்போது வரும்?

தன்னை வசீகரித்த ஆணுக்கு தன் அழகை விருந்து வைக்க அவளாகவே முன்வரும் போது... அந்த விருந்தை அந்த ஆண் அலட்சியப்படுத்தினால், அவமானமும், ஆத்திரமும், வெறியும் பெண்ணுக்கு வரும்!

அதனால்தான் பெண்கள் விஷயத்தில் முதலில் 'பிகு' பண்ணி அப்புறம் சம்மதிப்பார்கள்!

இது ஆண்களை பற்றி பெண்கள் அறிந்து வைத்திருக்கிற சைக்காலஜி!

இந்த சைக்காலஜி தெரியாமல் போனது போல!

ஆத்திரமும், அவமானமும் உச்சத்திற்கு ஏற...வைராக்கிய வெறி வந்தது!

'இனிமேல் உன் மூஞ்சியில் கூட முழிக்கமாட்டேன்!'

'சட்'டென சீறிவிட்டு 'சடாரென' வெளியேறிப் போனார் ஸ்லிம்!

தீயாய் இருக்க வேண்டிய காமம் தீப்பந்தமாய் மாறியது! அதில்...காதல் என்ற பூந்தோட்டம் கருகிப் போனது!

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் தாமதமாகிக் கொண்டிருக்க...அதற்குள் 'இன்னொரு முறை' முக்கிய பிரமுகர்'' படங்களில் நடித்து பரபரப்பாக பெயர் வாங்கிவிட்டார் ஸ்லிம்!

இவருடன் நடிக்க எல்லா நடிகர்களும் போட்டி போட்டார்கள்!

'லெஃப்ட் ஹேண்ட்' நடிகரோ வாய்ப்பில்லாமல் சரிவை நோக்கியிருந்தார்!

நாடே ஸ்லிம்மை ரசிக்கத் தொடங்கியிருந்த நேரம்...

'சந்தனக் கட்டை வீரப்பன் கதை' சம்பந்தமான ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்லிம் ஆட வந்தார். உடன் ஆடினார் ஒரு நடனக்காரர்!

எத்தனை பெரிய பேரழகான பெண்ணும் ஏதாவது ஒரு சென்டிமென்ட்டில் இருப்பார்! அந்த சென்டிமென்ட்டை எந்த ஆணாவது 'டச்' பண்ணிவிட்டால்... அவன் அசிங்கமா? அழகா? என்று பார்க்கமாட்டாள்! அவனிடம் சரணாகதி ஆகிவிடுவாள்!

தன் அழகில் ஐந்து சதவீத அழகு கூட இல்லாத அந்த நடனக்காரரிடம் சரணாகதியானார் ஸ்லிம்!

தமிழ்சினிமாவில் பரபரப்பான நடிகையாகிவிட்டதால் ஹோட்டலை காலி செய்துவிட்டு ஒரு பிரமாண்ட டைரக்டரின் வீட்டில் வாடகைக்கு குடியேறினார் ஸ்லிம்!

அந்த வீட்டில் ஸ்லிம்மும் நடனக்காரரும் சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்த காதல் விபரம் எதுவும் தெரியாத 'லெஃப்ட் ஹேண்ட்' நடிகரோ ஸ்லிம்முடனான தனது காதலை மறுபடி புதுப்பிக்கும் முயற்சியில் இருந்தார்!

பூக்களிடம் வண்டுகள் வன்முறை செய்வது வாடிக்கை! ஒரு மாறுதலுக்கு வண்டிடம் பூ வன்முறை செய்ததாக எடுத்துக் கொண்டால் என்ன தப்பு? என எண்ணிய 'லெப்ட்' மனம் மாறி அன்று நடந்ததற்காக மன்னிப்பு கேட்டு காதலை புதுப்பிக்க முயற்சி எடுத்தார். ஆனால் ஸ்லிம் மசியவில்லை!

லெஃப்ட்டோ விடுவதாக இல்லை!

தொடர்ந்து துரத்தினார் ஸ்லிம்மை!

விளைவு...

லெஃப்ட்டுக்கு கொலை மிரட்டல் விட்டார் நடனக்காரர்...

'அவ இனிமே என்னோட ஆள்! அவளை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்! இனிமே! இனிமே வாலாட்டினா உன்னை தொலைச்சுப்புடுவேன்!'

.....நடனக்காரர் எச்சரித்தார். ஆனால் இந்த எச்சரிக்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டு ஸ்லிம்மை தொலை பேசியில் துரத்தினார் லெஃப்ட்!
'இவ்வளவு சொல்லியும் நம்மளை கேணப்பய'ன்னு நினைக்கிறானே! இவனுக்கு பாடம் கற்பிச்சே ஆகணும்...!'என முடிவு கட்டிய நடனக்காரர் ஒரு திட்டத்தைத் தீட்டினார்.

அதன்படி....

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் நாலைந்து மோட்டார் சைக்களில் தடித்தடியான குண்டர்கள் யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தனர்!

அவர்கள் எதிர்பார்த்த கார் வந்தது! ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே பாய்ந்து டபாய்த்தது!

'ஏண்டா பேமாணி... கார்ல வந்தா கண்ணுத் தெரியாதா....பொறம்போக்கு! எறங்குடா கீழே...' என சவுண்ட் விட...இதற்குள் மற்ற மோட்டார் சைக்கிள் ஆட்களும் அந்த காரை சுற்றி வளைத்தனர்!

மோதியது யாரோ என நினைத்து திட்டுகிறார்கள். நாம் கீழே இறங்கினால்..'சார் சார் நீங்களா?'என ஆச்சர்யப்பட்டு ஆட்டோகிராஃப் கேட்பார்கள்!' என நினைத்தபடி லெப்ஃட் கீழே இறங்கினார்!

'நடிகன்னா பெரிய இவனா..?'என ஏக வசனத்தில் பேசிய அந்த குண்டர்கள்...'இனிமே அடுத்தவன் வழியில் தலையிடாதே!' என எச்சரித்துவிட்டு கிளம்பினார்கள்!

இது நடனக்காரர் அனுப்பிய ஆட்கள் என்று அப்போது தெரியவில்லை லெஃப்ட்டுக்கு! 'ஏதோ வண்டி மோதியதற்காக திட்டுகிறார்கள்' என நினைத்துக் கொண்டே போய்விட்டார்!

அன்று இரவு...

ஸ்லிம்மின் வீட்டில் நடனக்காரர் காதல் மொழி பேசியபடி ஸ்லிம்மை கொஞ்சிக் கொண்டிருந்தார்!

தொலைபேசி அழைத்தது! எடுத்தார் ஸ்லிம்! எதிர்முனையில் லெஃப்ட் என்பதை தெரிந்து கொண்ட நடனக்காரர் ஃபோனில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை தட்டினார்! இப்போது எதிர்முனையில் லெப்ஃட் பேசுவது நன்றாக கேட்டது நடனக்காரருக்கு.

போதை வழியும் குரலில் லெஃப்ட் பினாத்திக் கொண்டிருந்தார்.

'உன்னை என்னால் மறக்க முடியலை! உன்னோட மடிப்பே இல்லாத இடுப்பு என்னை இம்சை பண்ணுது! உன் அழகான மார்புக்கு நான் அடிமை! உன்னை அனுபவிக்கும்போது கிடைச்ச இன்பம் வேற யார அனுபவிச்சாலும் கிடைக்கமாட்டேங்குது! என்மேல் கோபம் இருந்தா மன்னிச்சிடு! என்னை மாதிரி அழகானவனை விட்டுட்டு கேவலம் தேவாங்கு மாதிரி இருக்கிற ஒருத்தனைப் போய் லவ் பண்றியே...'

...இப்படி நீண்ட லெஃப்ட்டின் டெலிபோன் பேச்சால் கொதித்து கொந்தளித்துப் போனார். அதிலும் தன்னை தேவாங்கு என்று கேவலமாக விமர்சித்ததை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும் என்கிற வெறியோடு வெளியேறினார் நடனக்காரர்!

மறுநாளிலிருந்து...

தினம் தினம் இரவு லெஃப்ட் வீடு திரும்பும் போதெல்லாம் ஏதாவது ஒரு சாலையில் குண்டர்களால் வழிமறித்து மிரட்டப்பட்டார்!

இப்படி தினம் தினம் தன்னை மிரட்டுவது யார்? ...ஏன் அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று போட்டோந்து கொள்ள முடியாத லெஃப்ட் கதிகலங்கிப் போனார்!

ஆனாலும் ருசிகண்ட பூனை பாலில் வாய் வைக்க அலைவது மாதிரி...தொடர்ந்து ஸ்லிம்மை துரத்தியதோடு ஷ§ட்டிங் ஸ்பாட்டுகளுக்கும் தேடி வர ஆரம்பித்தார்!

இந்த விஷயத்தை நடனத்திடம் சொன்னால் ரொம்ப விபரீதமாகிவிடுமோ எனப் பயந்த ஸ்லிம் அதை சொல்லாமல் மறைத்தார்!

மறுநாள் இரவு...

ஸ்லிம்மிடம் சினத்தோடு கேட்டார் நடனம்!

'ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு அவன் வந்தானாமே?'

'இல்லையே!'

'பொய் சொல்லாதே! எனக்கு தகவல் வந்தது! இன்னும் அவன் மேலே உனக்கு மோகமா? அவன்கிட்ட அனுபவிச்ச சுகத்தை மறக்க முடியலையா?'

...நடனம் இப்படி கேட்கவும் ஸ்லிம் அழுதுவிட்டார்!

'அவன் ஸ்பாட்டுக்கு வந்ததை சொன்னா உன்கிட்ட சொன்னா...நீ நேரடியா போய் அவனோட சண்டைப்போட்டு விபரீதமாயிடுமோன்'னுதான் சொல்லலை!

'ஓ சாரி டார்லிங்!'

ஸ்லிம்மை சமாதானப்படுத்திவிட்டு கிளம்பிய நடனம் அப்போதே தன் ஆட்களுக்கு உத்தரவு போட்டார்!

பெசண்ட் நகர் வழியே வந்து கொண்டிருந்த லெஃப்ட்டின் கார் வழிமறிக்கப்பட்டது. இந்த முறை மிரட்டல் மட்டும் விடாமல் ஆயுதங்களை காட்டி மிரட்டினார்கள்!

'திடுக்'கிட்டுப் போன லெஃப்ட் தப்பித்தோம் பிழைத்தோம் என தப்பி வந்தார்!

தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார்!

மறுநாள்...

சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு போனார் லெஃப்ட்!

**இது ஒரு கற்பனை ***